×

கீழடி 7ம் கட்ட அகழாய்வில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு!: தொல்லியத்துறையினர் உத்வேகம்..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழடி மற்றும் அகரத்தில் பழங்கால உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழடி, அகரம் மற்றும் கொந்தகையில் தமிழக தொல்லியல்துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இங்கு பழங்காலத்தில் வாழ்ந்த தமிழ் மூதாதையர் பயன்படுத்திய பொருட்கள் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை உறைகிணறுகள், வெள்ளி நாணயம், பவளம், உழவுக்கருவிகள், பானைகள், பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றை ஏராளமானோர் அகழாய்வுத் தளங்களுக்கு நேரில் வந்து பார்த்து செல்கின்றனர். எனினும் பானைகள், பானை ஓடுகள், உறை கிணறுகள் ஆகியவற்றை பார்வையிட மட்டுமே தங்களை அனுமதிப்பதாகவும் வெள்ளி நாணயம் உள்ளிட்ட பொருள்களையும் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழடியில் சமீபத்தில் குத்துவால் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது 5 மற்றும் 2 அடுக்கு உறைகிணறுகள் கிடைத்துள்ளன.

அதேபோல கீழடியின் அருகில் உள்ள அகரத்தில் சிதைத்த நிலையில் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அங்கு 125 சென்டி மீட்டர் ஆழத்தில் மற்றொரு கிணறும் கிடைத்துள்ளது. கீழடியை சுற்றிலும் தொடர்ந்து அகழாய்வில் கிடைத்து வரும் பொருட்கள் தமிழ் மூதாதையர் பழங்காலத்திலேயே நாகரீகத்தின் உச்சத்தை அடைந்துள்ளதை காட்டுவதாக தொல்லியத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Tags : Bottom, excavation, borehole
× RELATED ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த...