ஒலிம்பிக் மல்யுத்தம்: பஜ்ரங் பூனியா அரையிறுதிக்கு தகுதி: சீமா பிஸ்லா ஏமாற்றம்

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​65 கிலோ இந்தியாவின்  பஜ்ரங் புனியா இன்று முதல் சுற்றில், கிர்கிஸ்தானின்  எர்னாசர் அக்மடாலீவ்வுடன் மோதினார். இதில் 3-3 என சமனில் இருந்த போதிலும்  பஜ்ரங் பூனியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கால் இறுதி போட்டியில் ஈரான் வீரர் போர் டெசாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துனிசியா வீராங்கனையிடம் 1-3 எனத் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துனிசியாவின் சாரா ஹம்டியை எதிர்கொண்டார். இதில் 1-3 என சீமா பிஸ்லா தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

Related Stories:

More
>