×

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி!: 14வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்..!!

டெல்லி: பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் இன்றும் 14வது நாளாக முடங்கியது. நாடாளுமன்றத்தில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அவை சுமூகமாக நடைபெற எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் உளவு விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்று முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் கூச்சம், குழப்பம் நிலவியதை அடுத்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே மாநிலங்களவையிலும் பெகாசஸ் விவகாரம் எதிரொலித்தது.

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து மாநிலங்களவையும் நண்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கூட்டத்தொடரின் முதல் நாள் முதலே எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 13 நாட்களாக இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. 14வது நாளிலும் அமளி தொடர்ந்ததால் வரும் திங்கட்கிழமை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : MPs ,Pegasus ,Parliament , Pegasus, Opposition MPs, Parliament
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...