×

அலோபதி முட்டாள்தனமானது ராம்தேவ் சர்ச்சை கருத்து: மத்திய அமைச்சர் எதிர்ப்பு

புதுடெல்லி:  பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ராம்தேவ். இவர் யோகா குரு என்று பிரபலமாக அறியப்படுபவர். இந்நிலையில்  சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராம்தேவ் ஆங்கில மருத்துவ முறை குறித்து  விமர்சித்துள்ளார். அவரது  கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  ராம்தேவ் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.  இந்த வீடியோவில்,  நிகழ்ச்சியில் பேசும் ராம்தேவ்,  அலோபதி மருத்துவ முறைகளினால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இது சிகிச்சை அளிக்கப்படாததால்  மற்றும் ஆக்சிஜன் கிடைக்காததால் இறந்தவர்களை காட்டிலும் அதிகமாகும். அலோபதி மருத்துவம்  என்பது முட்டாள்தனமானது  மற்றும்  தோல்வியடைந்த அறிவியல் முறை” என குறிப்பிட்டுள்ளார்.  ஆங்கில மருத்துவ முறை குறித்து ராம்தேவின் கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  பெரும் நோய் தொற்று காலத்தில் உயிர்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் முயற்சித்துவரும் நேரத்தில் , அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்று கருத்தை ராம்தேவ் தெரிவித்து இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.  இது தொடர்பாக விளக்கம் கேட்டு பதஞ்சலி நிறுவனர் ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில்  ஆங்கில மருத்துவமுறை குறித்து தெரிவித்த கருத்துக்கு எழுத்து பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்,  தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் அலோபதி மருத்துவம் குறித்து ராம்தேவ் விமர்சித்ததை பதஞ்சலி நிறுவனம் மறுத்துள்ளது. வீடியோவில் உள்ள காட்சிகள் எடிட் செய்யப்பட்டு கருத்துக்கள் திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ராம்தேவ் தனக்கு வந்த வாட்ஸ்ஆப் செய்தியை படித்ததாகவும், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து ராம்தேவுக்கு மத்திய சுகாதராத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கண்டனம் தெரிவித்துள்ளளார். ராம்தேவ் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்….

The post அலோபதி முட்டாள்தனமானது ராம்தேவ் சர்ச்சை கருத்து: மத்திய அமைச்சர் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ramdev ,Union ,New Delhi ,Pathanjali ,Yoga Guru ,Minister ,
× RELATED ஒன்றிய அரசு செயலாளர்கள் மாற்றம்