ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணிக்கு வெண்கலம் குன்னூரில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

குன்னூர் :  டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றதை தொடர்ந்து  குன்னூர் ஹாக்கி நீல்கிரீஸ் சார்பில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா- ஜெர்மனி மோதியது‌. அதில், இந்திய அணி வெற்றி பெற்று  வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. 41 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் பதக்கத்தை வென்று வரலாற்றினை உருவாக்கியுள்ளது.

இந்திய அணி வீரர்களுக்கு நாடு முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது. இந்நிலையில், குன்னூரில் செயல்பட்டு வரும் ஹாக்கி நீல்கிரீஸ் அணி சார்பில்  இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து அண்ணா சிலை அருகே  ஹாக்கி பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் இணைந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.  

குன்னூரில் உள்ள மாணவ மாணவிகள் ஹாக்கி விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>