×

கல்வராயன்மலையில் 2700 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

சின்னசேலம் : கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருக்கோவிலூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டியன் மற்றும் போலீசார் சாராய ரெய்டு செய்தனர். அப்போது தும்பராம்பட்டு ஓடையில் 5 பேரல்களில் இருந்த 2500 லிட்டர் சாராய ஊறலையும் அதே இடத்தில் கொட்டி அழித்தனர். மேலும் அதே கிராமத்தில் மற்றொரு இடத்தில் இருந்த 200 லிட்டர் சாராயத்தையும் போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.

இதில் தலைமறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன் கூறுகையில், கல்வராயன்மலையில் எஸ்பி உத்தரவின்பேரில் தொடர் சாராய ரெய்டு நடத்தப்பட்டு சமீப காலத்தில் 20,000 லிட்டருக்கும்மேல் சாராய ஊறல் அதே இடத்தில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள்மீதும், விற்பவர்கள்மீதும், அரசு அனுமதியில்லாமல் மதுபான பாட்டில்கள் விற்பவர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Kalwarayanmalai , Chinnasalem: Police Inspector of Tirukovilur Prohibition Division based on the information received that counterfeit liquor was brewed in Kalvarayanmalai.
× RELATED கல்வராயன்மலையில் மாணவர்களுக்கு மதிய...