×

'நாம் அனைவரும் வெறுப்பு, மத வெறிக்கு எதிராக நிற்க வேண்டும்'!: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு..!!

வாஷிங்டன்: அனைத்து மக்களும் தங்கள் மதவழிபாட்டு முறைகளை அச்சமின்றி பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் சீக்கியர்களின் கோயிலில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டின் 9ம் ஆண்டு நினைவு நாளில் இந்த கருத்தை பைடன் கூறியுள்ளார். ஓக்ரிக் என்ற இடத்தில் அமைந்துள்ள சீக்கியர் கோயிலுக்குள் புகுந்து 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மைக்கல் என்ற மத பயங்கரவாதி ஒருவன் கண்மூடித்தனமாக சுட்டான். இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த நாளை நினைவுகூர்ந்து பைடன் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், நாம் அனைவரும் வெறுப்புக்கு எதிராகவும், மத வெறிக்கு எதிராகவும் நிற்க வேண்டும் என்றும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அனைவரும் அவரவரின் மத நம்பிக்கைகளை அச்சமின்றி பின்பற்றுவதற்கான சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஒரு சீக்கியர் கோயிலில் 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் மதவெறி மற்றும் வெறுப்பை நாம் கண்கூடாக கண்டோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த தாக்குதலில் உயிரிழந்த 10 பேரையும் அனைவரும் நினைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : US President ,Joe Biden , Hate, religious fanaticism, US President Joe Biden
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை