×

12ம் தேதி பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ அறிவிப்பு!!

பெங்களூரு : ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வரும் 12ம் தேதி பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் திட்டமிட்டவாறு இஸ்ரோ செயற்கைகோள்களை செலுத்தவில்லை. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28 அன்று பிஎஸ்எல்வி 51 ராக்கெட் மூலம் பிரேசிலைச் சேர்ந்த அமேசோனியா பூமி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும் 18 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதையடுத்து வரும் 12ம் தேதி காலை 5.43 மணிக்கு 2வது ராக்கெட்டை இஸ்ரோ செலுத்த திட்டமிட்டுள்ளது.இயற்கை பேரிழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல் , பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் குறித்து அறிய 2268 கிலோ எடை கொண்ட இஓஎஸ் 3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை பூமியின் மேற்பரப்பில் இருந்து 36,000 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்தில் இருந்து செலுத்தப்படும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் அடுத்த வாரம் தொடங்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Tags : Earth ,ISRO , ஜிஎஸ்எல்வி எப் 10
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...