×

எல்லை பிரச்னைக்கு சுமூக தீர்வு: அசாம்-மிசோரம் ஒப்பந்தம்

அய்சால்: ‘எல்லை பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணலாம்,’ என, அசாம் - மிசோரம் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அசாம், மிசோரம் எல்லை பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இரு மாநிலங்களின் எல்லை பகுதியில் கடந்த மாதம் 26ம் தேதி நடந்த மோதலில், அசாம் போலீசார் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அசாம் - மிசோரம் எல்லையில் பதற்றத்தை குறைக்க இரு மாநிலங்களின் பிரதிநிதி குழுக்களும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தின. இதில், எல்லை பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

இதற்கான ஒப்பந்தத்தில் அசாம் எல்லை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அதுல் போரா, அத்துறையின் ஆணையரும் செயலாளருமான ஜிடி. திரிபாதி, மிசோரம் உள்துறை அமைச்சர் லால்சாம்லியானா, உள்துறை செயலாளர் வன்லால்கத்சகா ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர், இரு மாநிலங்களும் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், `அசாம் எல்லை பகுதியின் கரீம்கன்ஜ், கைலாகண்டி, சச்சார் மாவட்டங்கள், மிசோரம் எல்லையின் மாமித், கோலாசிப் மாவட்டங்களில் பதற்றை தணிக்கும் நடவடிக்கையாக வனத்துறை, காவல்துறை ரோந்து பணிகளில் ஈடுபடாது. புதிய படைகளும் நிறுத்தப்படாது. நடுநிலையாக ஒன்றிய அரசின் படைகள் அப்பகுதியில் நிறுத்தப்படுவதை இரு மாநிலங்களும் வரவேற்கின்றன,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Social solution to the border issue: Assam-Mizoram agreement
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை