பஞ்சாப் முதல்வர் ஆலோசகர் பதவி பிரசாந்த் கிஷோர் திடீர் ராஜினாமா

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் தற்போது முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு இங்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இங்கு, முதல்வரின் அரசியல் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டு இருந்தார். அமரீந்தருக்கு இவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்த நிலையில், தனது தனிப்பட்ட காரணங்களுக்கான அரசியல் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார். அடுத்தாண்டு தேர்தல் நடக்கும் நிலையில், பிரசாந்த் கிஷோர் ராஜினாமா முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: