500 பேருக்கு புதிய ரேஷன்கார்டு: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ வழங்கினார்

செங்கல்பட்டு: மறைமலைநகர், செங்கல்பட்டு ஆகிய நகராட்சிகளில், புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 500 பேருக்கு, எம்எல்ஏ  வரலட்சுமி மதுசூதனன், நேற்று ரேஷன் கார்டுகளை வழங்கினார். தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 10 நாட்களில் புதிய குடும்ப அட்டைகளை உடனடியாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி செங்கல்பட்டு தொகுதியில் மறைமலைநகர், செங்கல்பட்டு ஆகிய நகராட்சிகளில், புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 500 பேருக்கு, ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு வட்ட வழங்கல்துறை சார்பில், செங்கல்பட்டு சின்னக்கடை பகுதி  மற்றும் மறைமலைநகர் பகுதி ரேஷன் கடைகளில் நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் துறை அலுவலர் சீதாலட்சுமி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் வீரமணி, செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் எஸ்.நரேந்திரன், மறைமலைநகர் நகர செயலாளர் ஜெ.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு, 500 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.  இதில், செங்கல்பட்டு ஆர்டிஓ சாகிதாபர்வீன், வருவாய் ஆய்வாளர்கள் தனசேகரன், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: