×

போக்குவரத்துக் கழகத்தில் 3 உயரதிகாரிகள் மாற்றம்

சென்னை: போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் மூன்று பேரை பணியிடமாற்றம் செய்து, போக்குவரத்துத் துறைச்செயலாளர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில்: போக்குவரத்துத் துறைத்தலைவர் அலுவலக தனி அதிகாரியாக இருந்த பி.திருவாம்பலம் பிள்ளை, மதுரை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராகவும், மேலாண்மை நிலை அதிகாரியாக இருந்த ஆர்.முத்துகிருஷ்ணன் பல்லவன் டிரான்ஸ்போர்ட் கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவன மேலாண் இயக்குநராகவும், மேலாண்மை அதிகாரியாக இருந்த கே.இளங்கோவன் போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலக தனி அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Transport , At the Transport Corporation 3 Aristocracy change
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...