×

தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கனிம வளத்துறை துணை மேலாளர் உயிரிழப்பு: 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: மின்கசிவு காரணமாக, தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாடு கனிம வளத்துறை துணை மேலாளர் மூச்சு திணறி உயிரிழந்தார். மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னை, திருவல்லிக்கேணி பெரிய தெருவில், பீஸ் பார்க் தனியாருக்கு சொந்தமான  தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு 1.20 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீ மளமளவென 4 தளங்களில் பரவியதையடுத்து புகை மூட்டம் போல் காட்சியளித்துள்ளது. இதையடுத்து விடுதி ஊழியர்கள்  எழும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ  இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் ெகாண்டு வந்து உடனடியாக தீயை அணைத்தனர்.

மேலும் விடுதியில் தங்கியிருந்த 7 பேரை தீயணைப்பு துறையினர் உடனடியாக மீட்டு  சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில்  ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் நடந்த சம்பவம்  குறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் விடுதியின் முதல்தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து  ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்ததால் தீப்புகையானது பரவி அனைவருக்கும் மூச்சு திணறல் ஏறப்பட்டுள்ளது.

மேலும், மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து காமராஜர் சாலையில் உள்ள கனிம வளத்துறை  லிமிடெட்டில் துணை மேலாளராக பணியாற்றி வரும் மதுரை மாவட்டத்தை ேசர்ந்த அரவிந்தன்  (50) என்பவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அரவிந்தன் உடலை  போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், போலீசார் வழக்குபதிவு செய்து மின்கசிவு காரணமாக தான் தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Mineral ,Resources ,Deputy Manager , In a fire at a private hotel Mineral Resources Deputy Manager Mortality: 6 people hospitalized
× RELATED சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான...