கேரள விமான பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை: பெங்களூருவில் தமிழக பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு

சென்னை: கேரள மாநிலத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதால், கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு நேற்று முதல் கொரோனா வைரஸ் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில், கேரள மாநிலத்திலிருந்து வரும் அனைத்து விமான பயணிகளையும் நிறுத்தி, கொரோனா வைரஸ் நெகட்டிவ் சான்றிதழ்களை பரிசோதித்த பின்பே வெளியே அனுப்புகின்றனர்.

சான்றிதழ்கள் இல்லாமல் வருபவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் எடுத்த பின்பே வெளியே அனுமதிக்கின்றனர். இல்லையேல் கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ்களும் போட்டுள்ளவர்கள், அதற்கான சான்றிதழ்களை காட்டினால் அனுமதிக்கப்படுகின்றனர்.கேரளாவில் இருந்து, வருபவர்களை கண்காணித்து ஆய்வு செய்வதற்காக, செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை உள்நாட்டு விமானநிலையத்தில் 30 பேரை பணியமர்த்தியுள்ளது. அவர்கள் சுழற்சி முறையில் ஷிப்டிற்கு 10 பேர் வீதம் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல பெங்களூரிலும் கடைபிடிக்கப்படுகிறது.

Related Stories: