வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் நளினியும், முருகனும் வீடியோ காலில் பேசினர்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதிக்க கோரி நளினியின் தாய் பத்மா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேலூர் சிறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த கடிதத்தில், உயர் நீதிமன்ற ஆணைப்படி வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் இருவரையும் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அனுமதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

More
>