×

துருக்கியில் காடுகளில் இருந்து நகரங்களுக்குள் பரவியது காட்டுத்தீ!: வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்.. பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

துருக்கி: துருக்கியில் மலை பகுதியில் உருவான காட்டுத்தீ நகரங்களுக்கு உள்ளேயும் பரவ தொடங்கியது. மருத்துவமனை வளாகம், அனல்மின் நிலையம் போன்ற இடங்களில் தீ கொளுந்துவிட்டு எரிவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி குடிபெயர்ந்து வருகின்றனர். துருக்கியில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத வகையில் பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் மலைப்பகுதியில் உருவான காட்டுத்தீ, படிப்படியாக பல நகரங்களுக்குள் பரவிவிட்டது.

முக்லா மாகாணம், மிலாஸ் மாவட்டத்தில் உள்ள கிமர்க்கோய் அனல்மின் நிலையத்தின் பெறும் பகுதி தீக்கிரையானது. அங்கிருந்த மற்ற கட்டிடங்களுக்கும் தீ பரவிவிடகூடாது என்பதற்காக தீயணைப்புப்படையினர் போராடி வருகின்றனர். அதையும் மீறி சில இடங்களில் தீ பரவி வருகிறது. பணியாற்றியவர்கள் முன்னெச்சரிக்கையாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மனிதர்கள் மட்டுமல்லாது பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.

அங்காரா பகுதியில் தனியார் மருத்துவமனை வளாகமே பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரும்புகையை கக்கியபடி எரிந்த அந்த தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் பலமணி நேரமாக போராடினர். இதேபோல் நகரத்தின் பல பகுதிகளில் கட்டிடத்தில் தீ பற்றி எரிவதால் மக்கள் பீதியில் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர்.


Tags : Turkey , Turkey, wildfire, people
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...