×

மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம் என அண்ணாமலை சபதம் : டெல்டா விவசாயிகள் பக்கம் பாஜக நிற்கும் எனவும் உறுதி!!

தஞ்சை : காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து ஆகஸ்ட் 5-ம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன் படி, இன்று தஞ்சை பனகல் கட்டிடம் அருகே அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடக்கிவைத்த நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் பங்கேற்றனர்.முன்பாக போராட்டத்திற்கு வருகை தந்த அண்ணாமலை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.  

இந்நிலையில், கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இந்த போராட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். குறிப்பாக, மையம் என்று கட்சி ஆரம்பித்து விட்டு மையம் இல்லாமல் செயல்படும் ஒருவர் (கமல்), இரண்டு பொம்மைகள் என்கிறார். நடிப்பின் உச்சகட்டம் அரசியல் என்பதை புரிந்து கமல் அரசியலுக்கு வந்துள்ளார். படப்பிடிப்பு போல், தேர்தல் பிரச்சாரம் செய்தார்.மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம்.தமிழக பாஜக என்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பக்கம் நிற்கும்.காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம்,என்றார்.


Tags : Karnataka Dam ,Megharata ,Delta Farmers , அண்ணாமலை
× RELATED உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு...