மதுரையில் மீனாட்சியம்மன் கோவில், விமான நிலைய பகுதிகளில் தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை

மதுரை: மதுரையில் தேசிய பாதுகாப்பு படையினர் மீனாட்சியம்மன் கோவில் மற்றும் விமான நிலையங்களில் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோவில் மற்றும் விமான நிலையம் ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளான இடம் என்று ஏற்கனவே பாதுகாப்பு துறையினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே மதுரை மீனாட்சியம்மன் கோவில் முழுவதுமாக பாதுகாப்பு படையினர் வசம் எடுக்கப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்லும் யாராக கே=இருந்தாலும் முழுமையாக சோதனை செய்த பின்புதான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து இந்த பாதுகாப்பு ஆண்டுதோறும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்திலும் இதேநிலை தான். இதனிடையே பாதுகாப்புகள் குறித்த ஒரு ஆய்வு மேற்கொள்வதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் டெல்லியில் இருந்து மதுரை வந்துள்ளனர்.

150க்கும் மேற்பட்ட இந்த வீரர்கள் இன்று இரவு மற்றும் நாளை இரவும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட உள்ளனர். முதற்கட்டமாக மதுரை விமான இளையத்தில் இன்று இரவு பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. ஒரு தீவிரவாதி விமான நிலையத்திற்கு உள்ளே வந்தால் அந்த தீவிரவாதியை தாக்கி விமான நிலையத்தை மீட்டெடுப்பது எப்படி என்ற முறையில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. அதேபோன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நாளை இரவு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.

 இந்த பாதுகாப்பு ஒத்திகைக்காக வந்துள்ள 150க்கும் மேற்பட்ட வீரர்கள் மதுரை ரிங் ரோடு சாலையில் உள்ள திடலில் தற்போது ஹெலிகாப்டரை இறக்கி அதில் அவர்களது பாதுகாப்பு ஒத்திகையை செய்து வருகின்றனர். மதுரையின் மைய பகுதியில் நடைபெறுகின்ற இந்த பாதுகாப்பு ஒத்திகை என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

Related Stories:

More
>