×

ஆகஸ்ட் 13ல் தமிழ்நாடு பட்ஜெட்: கலைவாணர் அரங்கில் பட்ஜெட்டிற்கான ஏற்பாடுகள் தயார்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 13ஆம் தேதி தமிழ்நாட்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படக்கூடிய சூழலில் இம்முறை பேப்பர் இல்லா பட்ஜெட் அதாவது இ-பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முடக்கிவிடப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமரக்கூடிய இருக்கைக்கு எதிர்புறம் உள்ள மேஜையில் கணினிகள் தற்போது பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் டேப் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. காகிதமில்லா சட்டப்பேரவை நடவடிக்கையாக மாற்றுவதற்காக கடந்த சில வருடங்களாகவே சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் பிடிஎஃப் ஆக மாற்றப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கக்கூடிய வினா - விடைகள், மானிய கோரிக்கைகள், பட்ஜெட் நகல் அனைத்தும் புத்தகங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அது பிடிஎஃப் வடிவில் அவர்களுக்கு இருக்கக்கூடிய கணினி திரை மற்றும் டேப்பில் பார்த்துக்கொள்ளும் வசதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பரிசோதனையின் அடிப்படையில் பேரவையில் அறிமுகம் செய்யப்படுகிறது. பாடிப்படியாக முழுமையாக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் காகிதமில்லா சட்டப்பேரவை நிகழ்வாக மாற்றக்கூடிய வகையில் முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

Tags : Tamil Nadu ,Kalaivanar Arena , Tamil Nadu Budget
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...