×

சென்னையில் நள்ளிரவில் மின் அலுவலகங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் ஆய்வு!: திக்குமுக்காடி போன ஊழியர்கள்..!!

சென்னை: சென்னையில் மின் அலுவலகங்களில் நள்ளிரவில் திடீரென்று ஆய்வு செய்த மின்சாரத்துறை அமைச்சர், குடிபோதையில் பணியில் இருந்த ஊழியரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மின்சார இணைப்பு துண்டிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு சென்று அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் ஆய்வு செய்தார். கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அமைச்சர் அங்கு நிகழும் பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்த போது பொதுமக்கள் ஒருவரிடம் தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைப்பு எடுத்து பேசிய அமைச்சர், அந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரினார். இதனை தொடர்ந்து வடசென்னை பகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை துணைமின் அலுவலகத்திற்கு சென்றார். அமைச்சரின் வருகையை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போகினர். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஆட்சியில் மின் மாற்றிகள் பல இடங்களில் மாற்றப்பட வேண்டிய சூழல் இருந்தும் அவை மாற்றப்படவில்லை என்று கூறினார்.

பொதுமக்கள் அளிக்கும் புகார்களை நிறைவேற்றாமல் மெத்தனமாக செயல்பாட்டால் விசாரித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த ஆட்சியில் மின் மாற்றிகள் போதுமான அளவிற்கு கையிருப்பு வைக்கப்படவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார். இதனை சரிசெய்து வருவதாக தெரிவித்த அவர், இதற்கான பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று கூறினார்.


Tags : Minister ,Senthilpalaji ,Chennai , Chennai, E-Office, Minister Senthilpalaji
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு