×

பெரம்பலூர் நகராட்சி, 2 பேரூராட்சிகளில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கால் 950 கடைகள் மூடல்

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், லெப்பைக்குடிகாடு பேரூர ட்சிகளில் புதிய ஊரடங்கு தடைஉத்தரவு அமுலுக்கு வந்ததால், தடை உத்தரவு அமலிலுள்ள பகுதிகளில் மொத்தமுள்ள 954 கடைகள் மூடப்பட்டு இருந்ததால் வெறிச்சோடிக் காணப்பட்டன. கொரோனா வைரஸ் தொற் றுப் பரவாமல் தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும்வகையில் பெர ம்பலூர் மாவட்டத்தில் பெர ம்பலூர் நகராட்சி, அரும்பா வூர் பேரூராட்சி மற்றும் லப் பைக்குடிக்காடு பேரூராட்சி க்கு உட்பட்ட கீழ்கண்ட பகு திகளுக்கு மட்டும் குற்றவி யல் நடைமுறைச்சட்டம் 19 73 பிரிவு 144ன் கீழ் 4ம் தேதி காலை 6 மணிமுதல் 10ம் தேதி மாலை 6 மணிவரை மாவட்ட கலெக்டரால் தடைஉத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இதன்படி பெரம்பலூர் நக ராட்சியில் பெரம்பலூர் சிவன் கோவில் முதல் வானொலி திடல், பழைய பஸ் நிலையம் வழியாக காமராஜர் வளைவுவரை, பழைய பஸ் நிலையம் மார்க்கெட் பகுதிவரை, போஸ்ட் ஆபிஸ்தெரு, கடைவீதி என்.எஸ் .பிரோடு, பழைய பஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதிகள்,. அரும்பாவூர் பேரூராட்சியில் தழுதாழை சாலைமுதல் அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகம் வரை, பாலக்கரை முதல் அ.மேட்டூர் வரை, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில், மாட்டுப்பாலம் முதல் அரசு பெண்கள் மேல் நிலை ப்பள்ளி வரை ஆகிய இடங்களில் மருந்தகங்கள், பால், காய் கறிகள் உள்ளி ட்ட அத்தியாவசிய தேவை க்கான செயல்பாடுகள் மட் டும் நிலையான வழிகாட் டு நடை முறைகளை பின்பற்றி 50சதவீத வாடிக்கையா ளர்களுடன் செயல்பட அனுமதித்து. பிற விற்பனை மையங்கள் அனைத்தும் காலை 9மணிமுதல் மாலை 4மணிவரை மட்டுமே வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத வாடிக் கையாளர்களுடன்செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சியிலுள்ள 2,456 கடைகளில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள 546 கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 258 கடைகளும், அரும்பாவூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 150 கடைகளும் என 3 இடங்களிலும் தடையுத்தரவு அமலில் உள்ள பகுதிகளில் மொத்தமுள்ள 954 கடைகளும் மூடப்பட்டு இருந்தன. தடைசெய்யப்பட்ட பகுதிகளில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டதால் அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த உத்தரவு வருகிற 10ம்தேதி மாலை 6 மணிவரை அமலில் இருக்கும் என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Tags : Perambalur Municipality , Perambalur, Curfew
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா