×

OBC பட்டியலில் புதிய சாதிகளை சேர்க்க மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி : இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்க்க மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் புதிய சாதிகளை சேர்த்து கொள்ள மீண்டும் அதிகாரம் அளிப்பது தொடர்பான அரசியல் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு ஏற்கனவே இருந்த அதிகாரம் அரசியல் சட்டத்தின் 122வது திருத்தத்தின் மூலமாக பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 122வது அரசியல் சட்டத்திருத்தம் சமூக கல்விரீதியாக பின்தங்கிய சாதிகளை ஓபிசி பட்டியலில் சேர்க்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாக கடந்த மே 5ம் தேதி உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்தது.

இதனை மறு ஆய்வு செய்யக் கோரி ஒன்றிய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இதையடுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் வகையிலான அரசியல் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Tags : Union Cabinet ,OBC , அதிகாரம்
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...