×

செல்போனில் புதிய வசதி பூகம்பம் வருவதை எச்சரிக்கும் ஆப்: உத்தரகாண்ட்டில் அறிமுகம்

டேராடூன்: நாட்டிலேயே முதல் முறையாக நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் மொபைல் ஆப் உத்தரகாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஐடி ரூர்க்கி நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் வகையிலான மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது. ‘உத்தர்காண்ட் பூகம்பம்’ என பெயரிடப்பட்டுள்ள இதை முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், பேசிய புஷ்கர், ‘‘உயிர்காக்கும் மொபைல் செயலி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,’’ என்றார்.

நிலநடுக்கம் ஏற்படுவதை இந்த செயலி முன்கூட்டியே எச்சரிக்கும். இதன் மூலம், மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கும்,  பாதுகாப்பாக இடங்களுக்கு செல்லவும் முடியும். இந்த செயலி, ஆன்ட்ராய்டு மற்றும்  ஐஓஎஸ் எனப்படும் 2 முறைகளிலும் இயங்கும் வசதி கொண்டுள்ளது.


Tags : Uttarakhand , New feature on cell phone The coming of the earthquake Warning App: Introduced in Uttarakhand
× RELATED உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட...