மேகதாது அணைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு.: அமமுக அறிவிப்பு

சென்னை:  அமமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மேகதாது  அணையைத் தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் அமமுக சார்பில் தஞ்சாவூரில் வரும் 6ம்தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நடைபெறவிருந்த இப்போராட்டத்திற்கு கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிற காரணத்தைக் கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.  இப்போராட்டத்தால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவிடக் கூடாது என்ற அக்கறையோடும் வரும் 6ம்தேதி தஞ்சாவூரில் நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்தைத் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>