ஊருக்குள் வந்து நாசம் செய்வதை தடுக்க யானைகளுக்கு நெல் தீவனம் சட்டீஸ்கரில் புதுமை திட்டம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் யானைகள் ஊருக்குள் புகுந்து வயல்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த 2018 - 2020 வரையிலான காலத்தில் 204 பேரை யானைகள் கொன்றுள்ளன. அதேபோல், 45 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும், யானைகளால் பயிர்கள் நாசம் செய்யப்பட்ட சம்பவம் 66 ஆயிரத்து 582 நடந்துள்ளன. 5 ஆயிரத்து 47 வீடுகள் நாசமாகி உள்ளன. இதர சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் 3.151 நடந்துள்ளன.இதற்கெல்லாம் ஒரே காரணம். யானைகள் உணவு தேடி ஊருக்குள் வருவதுதான். அதை ஊருக்குள் வரவிடாமல் தடுக்க இம்மாநில அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. ஊருக்குள் வரும் யானைகள், நெற்பயிர்களை அதிகமாக தின்று விட்டு செல்கின்றன.

எனவே, அதற்கு பிடித்த நெல்லை காட்டுக்குள் எடுத்து சென்று உணவாக கொடுத்து விட்டால், ஊருக்குள் வராது என திட்டமிட்டுள்ளது. எனவே, விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒரு குவிண்டால் நெல்லை ரூ.2,095க்கு வாங்க உள்ளது. ஆனால், யானைகளுக்கு தீவனம் வாங்கும் இந்த திட்டம், பீகாரில் நடந்த கால்நடை தீவன ஊழலை போல் பெரியளவில் ஊழல் செய்வதற்காக அமல்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சியான பாஜ குற்றம்சாட்டி உள்ளது.

Related Stories:

More
>