வையாவூர் துணை மின் நிலையத்தில் 2 கோடியில் புதிய மின்மாற்றி துவக்கம்: எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்: வையாவூர் துணை மின் நிலையத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனை, எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்.காஞ்சிபுரம் தாலுகா வையாவூர் பகுதியில் துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து கோனேரிகுப்பம், வையாவூர், களியனூர், நத்தம்பேட்டை, முத்தியால்பேட்டை, வள்ளுவபாக்கம், அசோக்நகர், ஒழையூர், மோட்டூர் உள்பட பல பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது மேற்கண்ட பகுதிகளில் குடியிருப்புகள், வீடுகள் அதிகரித்து வருகிறது. இதனால் மின்தேவையும் அதிகரித்துள்ளது. இதையொட்டி, கூடுதல் மின்மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைதொடர்ந்து, வையாவூர் துணை மின் நிலையத்தில், 2 கோடியில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் துவக்கவிழா நேற்று நடந்தது. மேற்பார்வை பொறியாளர் பிரசாத் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் சரவணதங்கம், உதவி செயற்பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை துவக்கி வைத்தார்.இதில் திமுக மாவட்ட அவைத் தலைவர் சேகர், ஒன்றிய செயலாளர் பூபாலன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வேதாசலம், தொமுச திட்ட செயலாளர் அறிவழகன், தொவிமு சங்க மாநில தலைவர் தம்பித்துரை, குடியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>