திருத்தணி, திருவள்ளூரில் கலைஞருக்கு வெண்கல சிலை அமைப்பு : திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக தீர்மானம்

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர்  செயலாளர்களின்  ஆலோசனைக் கூட்டம் திருத்தணியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். எம்எல்ஏ க்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் வினோத்குமார் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் ஆர்டிஇ.ஆதிசேஷன், ஓ.ஏ.நாகலிங்கம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.திராவிட பக்தன், எஸ்.கே.ஆடம், எம்.கோதண்டம், பா.சிட்டிபாபு, இ.கே.உதயசூரியன், ம.ரகு, களாம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், சரஸ்வதி சந்திரசேகர், சிவசங்கரி உதயகுமார், மு.நாகன், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் விசிஆர்.குமரன், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், சி.சு.ரவிச்சந்திரன், டி.கிருஷ்டி, ஆரத்தி ரவி, ரவீந்திரா, ச.மகாலிங்கம், மோ.ரமேஷ், க.அரிகிருஷ்ணன், சி.ஜெ.சீனிவாசன், சண்முகம், பழனி, ஜோதி, பாபு மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வரும், 7 ம் தேதி அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு தொடர்ந்து 100 நாட்களுக்கு வாகனத்தில் கிராமம், கிராமமாகச் சென்று 500 பேருக்கு அன்னதானம் வழங்குவது என்றும், திருத்தணி மற்றும் திருவள்ளூரில் கலைஞருக்கு வெண்கல சிலை அமைப்பது என்றும், ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் அகில இந்திய தொகுப்பில், 27 சதவீதம் ஓதுக்கீடு பெற்று தந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், இதுகுறித்து மக்களிடையே துண்டுபிரசுரம் வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>