சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை வியாபாரி ஜெயராஜின் மனைவி நீதிபதி முன் கண்ணீர் மல்க சாட்சியம்

மதுரை: சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி பத்மநாபன் முன் நேற்று மீண்டும் வந்தது. அப்போது சிறையில் இருந்து போலீசார் 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜெயராஜின் மனைவியும், வழக்கின் முக்கிய சாட்சியுமான செல்வராணி தொடர்ந்து 3 மணி நேரம் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆக. 11க்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அன்றைய தினம் ஜெயராஜின் மகள் சாட்சியமளிக்கிறார்.

Related Stories:

More
>