×

கேரள எல்லை சோதனை சாவடியில் ஆசிரியர்களுக்கு தினமும் 3 ஷிப்ட் பணி

நாகர்கோவில்: கொரோனா பரவலில் 3ம் அலைக்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தடுப்பு பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  குமரி - கேரள எல்லை பகுதியில் களியக்காவிளை சோதனைசாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வருவாய்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில் ‘‘களியக்காவிளை சோதனை சாவடி வழியாக வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற வாகனங்கள் மற்றும் நபர்கள் குறித்த விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பொறுப்பு அலுவலரிடம் தினசரி அறிக்கை செய்ய ஏதுவாக, காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பிற்பகல் 2 முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 முதல் காலை 6 மணி வரை என்று 3ஷிப்ட்களில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். பட்டதாரி, இடைநிலை மற்றும், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர் என ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஒரு வாரத்திற்கு 6 பேர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala Border , At the Kerala Border Check Post 3 shift work per day for teachers
× RELATED கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால்...