×

போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜ மேற்கு மண்டல தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை: சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பெண் மற்றும் அவரது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாஜ வழக்கறிஞர் பிரிவு பெரம்பூர் மேற்கு மண்டல தலைவர் பார்த்தசாரதி மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இந்த இரு வழக்குகளிலும், பார்த்தசாரதியை போலீசார் தேடி வந்தனர்.  

இந்நிலையில், பாஜ  வட சென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாலும், பார்த்தசாரதி மீது காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாலும், கட்சியின் பொறுப்பிலிருந்து, அவரை நீக்குவதாகவும், தொடர்ந்து அவர் கட்சி பொறுப்பில் இருப்பதாக கூறி செயல்பட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.
பார்த்தசாரதி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து 20 நாட்கள் கடந்துள்ளது. இனியாவது எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அவரை கைது செய்வார்களா என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : Bajwa ,Pokcho ,West Zone , Bajaj, who was wanted in the Pokcho case, has been expelled from the party
× RELATED கொலை, கொள்ளை உள்பட 21 வழக்குகள்:...