திருவில்லிபுத்தூர்: ஆடிப்பூர தேரோட்ட கொடியேற்றத்தை முன்னிட்டு, கொலுசு மற்றும் நெத்திச்சூடி அலங்காரத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை காட்சியளித்தது. ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று கொடியேற்ற விழா நடந்தது. பக்தர்கள் யாருமின்றி கோயில் நிர்வாகிகள், அர்ச்சகர்களுடன் மிக எளிமையான முறையில் கொடியேற்றம் நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் யானை ஜெயாமால்யதா வழக்கம்போல் கோயில் நுழைவாயிலில் உள்ள யானை கால் மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
விழாவையொட்டி ஜெயமால்யதாவின் 2 கால்களிலும் கொலுசுகள் அணிவிக்கப்பட்டிருந்தன. கொலுகளில் ஒலி எழுப்பும் வகையில் மணிகள் கோர்க்கப்பட்டிருந்தன. மேலும் யானையை அலங்கரிக்கும் வகையில் அதற்கு நெற்றிச்சூடி அணிவிக்கப்பட்டிருந்தது.