×

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்: மகளிர் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றார் லவ்லினா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நடந்த மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடை போட்டியில், இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், துருக்கி வீராங்கனை புசானெசிடம் தோல்வியடைந்தார். இருப்பினும் அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் லவ்லினா, வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் கடந்த 30ம் தேதி நடந்த 69 கிலோ எடைப்பிரிவு மகளிர் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா, சீன தைபேவை சேர்ந்த நியென் சின் சென்னை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் துருக்கியை சேர்ந்த புசெனஸ் சர்மெநெலியுடன், லவ்லினா மோதினார். இப்போட்டியில் முதல் ரவுண்டில் இருந்தே லவ்லினா தொடர்ந்து பின்தங்கினார். மொத்தம் நடந்த 3 ரவுண்ட்களையும் 30-26, 30-26, 30-25, 30-25, 30-25 என்ற கணக்கில் கைப்பற்றிய துருக்கி வீராங்கனை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இப்போட்டியில் லவ்லினா தோல்வியடைந்ததால், வெள்ளிப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். இருப்பினும் அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம், அவருக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படும். அசாம் மாநிலம் கோல்காட் நகரை சேர்ந்த லவ்லினா (23), கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டு நடந்த உலக குத்துச்சண்டை போட்டியில் இதே எடைப்பிரிவில் வெண்கலம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அசாமின் சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து வந்து, டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் இந்திய வீராங்கனை லவ்லினா, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் உந்துசக்தியாகத் திகழ்கிறார்’ என்று, தமது வாழ்த்து செய்தியில் பாராட்டியுள்ளார்.


Tags : India ,Olympics ,Lovelina , Another medal for India at the Olympics: Lovelina wins bronze in women's boxing
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...