மகளிர் 400 மீ தடை ஓட்டம்: சிட்னி மெக்லாலினுக்கு தங்கம்

டோக்கியோ: ஒலிம்பிக் மகளிர் 400 மீ தடை ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லாலின் தங்கம் வென்றார். இன்று காலை டோக்கியோ ஒலிம்பிக் மெயின் ஸ்டேடியத்தில் மகளிர் 400 மீ தடை ஓட்டத்தின் இறுதிச்சுற்றுப் போட்டி நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லாலின், போட்டி தூரத்தை 51.46 வினாடிகளில் எட்டி, முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அமெரிக்காவின் டலியாஹ் முகமது இத்தொலைவை 51.58 வினாடிகளில் கடந்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். நெதர்லாந்து வீராங்கனை ஃபெம்கே போல் 52.03 வினாடிகளில் ஓடி, 3வதாக வந்து வெண்கலம் வென்றார். 

Related Stories: