மும்பை: நடிகர் சஞ்சய் தத் முன் விடுதலை தொடர்பான விவரங்களை வழங்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் இறுதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட குற்றவாளியான நடிகர் சஞ்சய் தத்துக்கு பலமுறை பரோல் வழங்கப்பட்ட நிலையில், தண்டனை காலம் முடியும் முன்னரே முன்விடுதலை செய்யப்பட்டார். 256 நாட்களுக்கு முன்பாகவே அவர் விடுதலை செய்யப்பட்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.