டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இன்று நடைபெற்ற மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், துருக்கியை சேர்ந்த நம்பர் 1 வீராங்கனை புஷெனாசிடம் இந்திய வீராங்கனை லவ்லினா மோதினார். 3 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் துருக்கி வீராங்கனை புஷெனாஷ் நேர்த்தியான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அரையிறுதி போட்டியில் 5 - 0 என்ற புள்ளிகள் கணக்கில் லவ்லினாவை துருக்கி வீராங்கனை புஷெனாஷ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். போட்டியில் லவ்லினா தோல்வி அடைந்தாலும், அரையிறுதி வரை முன்னேறியதால் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே வெண்கல பதக்கம் வென்று லவ்லினா சாதனை படைத்து உள்ளார். தொடர்ந்து, ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 3வது இந்தியர் லவ்லினா ஆவார்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் டிவிட்டர் பதிவில், லவ்லினா நன்றாக சண்டை செய்ததாகவும், குத்துச்சண்டை வளையத்தில் அவர் பெற்ற வெற்றிகள் மேலும் பல இந்தியர்களை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய மன உறுதி போற்றத்தக்கது. வெண்கலப் பதக்கம் வென்றதற்குப் பாராட்டுகள் என்றும் கூறியுள்ளார். மேலும் லவ்லினாவின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>