×

தமிழ் ஆட்சி மொழி என்ற உரிமையை பறிப்பதா? இலங்கைக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்

சென்னை: சிங்களத்துக்கு இணையாக தமிழும் ஆட்சி மொழி என்ற உரிமையை பறிக்கிற வகையில் இலங்கை அரசு ஈடுபட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: கொழும்புவில் உள்ள  இலங்கை தலைமை வழக்கறிஞர் அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டில் ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருக்கிற தமிழ் மொழி அகற்றப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக சீன மொழியான மாண்டரின் வார்த்தைகள்  சேர்க்கப்பட்டுள்ளன. இது இலங்கையில் வாழுகிற தமிழ் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிங்களத்துக்கு இணையாக தமிழும் ஆட்சி மொழி என்ற உரிமையை பறிக்கிற வகையில் இலங்கை அரசு ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.பாஜ அரசின் இத்தகைய போக்கு காரணாமாக இலங்கையில் வாழுகிற தமிழர்களின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது. இலங்கை தமிழர்களின் உரிமைகளை பறிக்கிற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துகிற முயற்சியில் மத்திய பாஜ அரசு ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைக்க வேண்டும்…

The post தமிழ் ஆட்சி மொழி என்ற உரிமையை பறிப்பதா? இலங்கைக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Sri ,Lanka ,Chennai ,Sri Lankan Government ,Sri Lankan Congress ,
× RELATED நெல்லை காங். தலைவர் மரணத்தில் இலங்கை...