×

கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும்-கோவை இளைஞர்கள் வலியுறுத்தல்

திருப்புவனம் : கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பார்வையிட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோவையில் இருந்து பார்வையிட வந்த இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில் 7 குழிகள், அகரத்தில் 8 குழிகள், கொந்தகையில் 4 குழிகள், மணலூரில் 3 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை உறைகிணறுகள், வெள்ளி நாணயம், உழவு கருவி, பானைகள், பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழக அரசு தளர்வு அறிவித்ததை தொடர்ந்து பார்வையாளர்கள் சமூக இடைவெளியுடன் கீழடி அகழாய்வு தளங்களை பார்வையிட்டு செல்கின்றனர். நேற்று கோவையில் இருந்து 6 இளைஞர்கள் கீழடி அகழாய்வு தளங்களை பார்வையிட வந்திருந்தனர். அகழாய்வு தளங்களை பார்வையிட்ட அவர்கள், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அனைத்தையும் காட்சிக்கு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : Coimbatore , Turnaround: Arrangements should be made to view all materials found in the seventh phase excavation below
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு