ஆதார் விவரங்களை புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: ஆதார் விவரங்களை புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே என ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்ற கிளைக்கு கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த கணேசன் காணாமல் போன தனது 17 வயது மகனை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் நான் வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறேன். எனது மகன் சண்முகப்பிரியன்(17) 12-ம் வகுப்பு படித்துவருகிறார். செப்டம்பர் 2019 அன்று தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற அவன் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தும் காவலர்கள் தங்கள் மகனை இதுவரை கண்டுபிடித்து தரவில்லை.

எனவே இதில் நீதிமன்றம் தலையிட்டு தனது மகனை மீட்டு தர காவல்துறையினருக்கு உத்தரவிடும்படி மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு ஆகியர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் காணாமல் போன மாணவனின் ஆதார் விபரங்கள் கிடைக்க பெறாததால் மாணவனை கண்டுபிடிப்பதில் தாமல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆதார் விபரங்கள் தனிநபர்  சம்பந்தப்பட்டவை, ஆகவே நீதிமன்றம் உத்தரவிட்டால் அதன் அடிப்படையில் வழங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்க்கு நீதிபதிகள் ஆதார் விபரங்களை தனி நபருக்குத்தான் வழங்கக்கூடாது, இதுபோன்ற வழக்குகளில் விசாரணைக்கு உதவும் வகையில் புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே என கேள்வி எழுப்பி இதுகுறித்து ஆதார ஆணையம் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: