திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு-நாடகங்கள் நடத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகம்

செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வை அதிகாரிகள் விளக்கி கூறினர்.

செய்யாறு நகராட்சி வளாகத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து தன் சுத்தம் மற்றும் முகக்கவசத்தின் அவசியத்தை குறித்த விழிப்புணர்வு நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் பி.ஆர்.பாலசுப்பிரணியம் தலைமை தாங்கினார். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.மதனராசன் முன்னிலை வகித்தார். இதில் நாவல்பாக்கம் வட்டார மருத்துவர் ஏ.சி.சர்மிளா கலந்து கொண்டு கொரோனா அச்சம் கொள்ளாமலும், அதே சமயம் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என்றும், கை கழுவுவதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.

தொடர்ந்து சிறு, குறு மற்றும் பெரு வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றார். தொடர்ந்து வியாபாரிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் குத்தனூர் கிராமத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு நாடகம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் என்.ஈஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் என்.முனுசாமி, சுகாதார ஆய்வாளர் கே.சம்பத் செவிலியர்கள் கலைவாணி, குஷ்பூ, ஊராட்சி ஒன்றிய செயலாளர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தன்னார்வ  தொண்டு நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

போளூர்: போளூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ெகாரோனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கல்வி அலுவலர் ரா.கலைவாணி தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் ச.ஷைனிமோல் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை பா.தாமரைசெல்வி வரவேற்றார். திருசூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் த.தேன்தமிழ்இசை கலந்து கொண்டு கைகழுவும் முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.

அதேபோல், போளூர் பேரூராட்சியில் வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை, பேரூராட்சி நிர்வாகம் இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தாசில்தார் மு.சாப்ஜான் தலைமை தாங்கினார். டிஎஸ்பி எம்.அறிவழகன், வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் இரா.உமாமகேஸ்வரி வரவேற்றார். ஊர்வலத்தை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் எம்.ரமேஷ் கொடியசைத்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, சமூக நல தாசில்தார் ஹரிதாஸ், மண்டல துணை தாசில்தார் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் பார்த்திபன் கலந்து கொண்டு, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.  

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.டி.குமார், பொருளாளர் ராமன் முன்னிலை வகித்தனர். இளநிலை நிலை உதவியாளர் வீரமணி வரவேற்றார். ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் வேலாயுதம் கொரோனா 3ம் அலை பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அறிவியல் பூங்காவில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை) பிரதாப், மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, பிடிஓ அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

Related Stories:

More
>