சித்தூர் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் அமைச்சர் பொச்சா சத்யநாராயணா சுவாமி தரிசனம்

சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பொச்சா சத்யநாராயணா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் ஆந்திர மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சத்யநாராயணா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவருக்கு கோயில் சார்பில் லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும், நினைவு பரிசாக சுவாமி புகைப்படம் கொடுக்கப்பட்டது. முன்னதாக, அவரை கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அப்போது, பூதலப்பட்டு  எம்எல்ஏ பாபு, சித்தூர் எம்எல்ஏ ஜங்காளபள்ளி சீனிவாசலு, மாநகராட்சி ஆணையர் விஸ்வநாத், மேயர் அமுதா, கோயில் செயல் அலுவலர்கள் வித்யாசாகர், ரவிந்திரபாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.அதேபோல், திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பொச்சா சத்யநாராயணா நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவருக்கு அர்ச்சகர்கள் வேதங்கள் முழங்க ஆசீர்வாதம் செய்து லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.

முன்னதாக, அவரை கோயில் அதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Related Stories:

More