பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தி அம்மிக்கல்லை தலையில் போட்டு அரிசி வியாபாரி படுகொலை: அக்காவுடன் கள்ள தொடர்பு வைத்ததால் ஆத்திரம்; 2 வாலிபர்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை அடுத்த சின்ன ஐயங்குளம், காமாட்சி நகரை சேர்ந்தவர் வரதன் (40). இவரது மனைவி ஷீலா (33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்  கனகராஜ் (46).  காஞ்சிபுரத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, அரிசி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகள் முன் கனகராஜுக்கும், ஷீலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம், வரதனுக்கு தெரிந்தது. இதையடுத்து அவர், ஷீலாவை  கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்களது தொடர்பு நீடித்துள்ளது. இதையொட்டி வரதனுக்கும், ஷீலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஷீலா, கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தேனம்பாக்கத்தில் உள்ள கனகராஜுடன் வசித்து வந்துதார்.

இந்நிலையில்,  ஷீலாவின் தம்பி ராஜிவ் காந்தி (எ) ராஜிவ் (25), அவரது நண்பர் உதயகுமார் (25) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஷீலா வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த கனகராஜை சரமாரியாக தாக்கி, பீர் பாட்டிலால் குத்தி, தலையில் அம்மிக்கல்லை போட்டு படுகொலை செய்தனர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்த ஷீலா அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள், 2 பேர் தப்பிவிட்டனர். தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்தனர்.

அதில், கொலை செய்யப்பட்ட கனகராஜூக்கும், ஷீலாவுக்கும் உள்ள கள்ளத்தொடர்பு, உறவினர்களுக்கு தெரிந்துள்ளது. இதனால், அவரது தம்பி ராஜிவ், ஷீலாவை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அதை கேட்கவில்லை. இதையடுத்து தனது அக்காவுடன் உள்ள தொடர்பை முறித்து கொள்ளும்படி கனரகராஜிடம் கூறியுள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரத்தால், தங்களது குடும்பம் அவமானப்படுவதாகவும், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார். இந்தவேளையில், கனகராஜிக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ராஜிவ், நேற்று முன்தினம் இரவு, தனது நண்பர் உதயகுமாருடன் மதுபாட்டில் வாங்கி கொண்டு, ஷீலா வீட்டுக்கு சென்றார். அங்கு கனகராஜ் உள்பட 3 பேரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் ஷீலாவுடன் உள்ள தொடர்பு சம்பந்தப்பமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜிவ், அருகில் பீர் பாட்டிலை உடைத்து, கனகராஜின் கழுத்து, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தினார். மேலும், வீட்டில் இருந்த அம்மிகல்லை எடுத்து அவரது  தலையில் போட்டு கொலை செய்துவிட்டு, அங்கிருந்து 2 பேரும் தப்பித்து  சென்றனர் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார்,  அதே பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜிவ், உதயகுமார் ஆகியோரை நேற்று மாலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Related Stories:

More
>