×

ஏழுமலையானை தரிசிக்க இன்று டிக்கெட் வெளியீடு

திருமலை: வருடாந்திர பவித்திர உற்சவத்தில் ஏழுமலையானை தரிசிக்க இன்று டிக்கெட் வெளியிடப்பட உள்ளது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற 17,18,19 மற்றும் 20ம் தேதிகளில் வருடாந்திர பவித்திர உற்சவம் நடைபெற உள்ளது. இந்த 4 நாட்களுக்கான தரிசன டிக்கெட் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த 4 நாட்களுக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இந்த 4 தினங்களுக்கு ஒரு நாளைக்கு 8 ஆயிரம்  டிக்கெட்களை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையத்தளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Ezhumalayana , Tickets released today to visit Ezhumalayana
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போலி...