கும்மிடிப்பூண்டியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கொரோனா நோய்த்தொற்று 3வது அலையை கட்டுப்படுத்துவது குறித்து பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சுகாதாரத்துறை, வருவாய் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் துவங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ்,  பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, பேரூராட்சி ஊழியர்கள் ரவி, சண்முகவேல் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் கொரோனா  விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை வட்டாட்சியர் ந.மகேஷ் துவக்கி வைத்தார். தொடர்ந்து  பொதுமக்களுக்கு கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு  துண்டு பிரசுரங்களை  பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும், பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போடுதல் குறித்து அறிவுறுத்திய அதிகாரிகள் ஆட்டோக்கள், பேருந்துகள் மற்றும் கடைகளில் கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

Related Stories:

>