×

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனத்தால் 3 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனத்தால் நீலகிரி, கோவை, சேலம் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, சேலம் மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுவையிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆக. 5, 6 தேதிகளில் நீலகிரி, கோவை, சேலம் மற்றும் கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக. 7-ல் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

Tags : Meteorological , Southwest monsoon, 3 districts, rain, weather
× RELATED நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை...