×

பெரம்பலூர் நகராட்சி, 2 பேரூராட்சிகளில் நாளை முதல் 10ம் தேதி வரை புதிய விதிகளுடன் ஊரடங்கு அமல்: கலெக்டர் உத்தரவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை முதல், பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், லெ ப்பைக்குடிகாடு பேரூராட்சி களில் ஊரடங்கு புதிய தடை உத்தரவு அமலுக்கு வ ருகிறது. கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின் பற்றா விட்டால் அபராதம் விதிக் கப்படும். பெரம்பலூர் மாவ ட்டக் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் தெரிவித்திருப்பதாவது :கொரோனா வைரஸ் தொற் றுப் பரவாமல் தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடு ப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் வகையில் பெர ம்பலூர் மாவட்டத்தில் பெர ம்பலூர் நகராட்சி, அரும்பா வூர் பேரூராட்சி மற்றும் லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ்கண்ட பகுதிகளுக்கு மட்டும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1973 பிரிவு 144ன் கீழ் நாளை (4ம் தேதி) காலை 6 மணி முதல் 10ம்தேதி மாலை 6 மணிவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இதன்படி பெரம்பலூர் நக ராட்சியில் பெரம்பலூர் சிவன் கோவில் முதல் வானொலி திடல் சந்திப்பு வரை. வானொலி திடல் முதல் பழைய பேருந்து நிலையம் வரை.பழைய பேருந்து நிலையம் முதல் காமராஜர் வளைவு வரை. பழைய பேருந்து நிலையம் மார்க்கெட் பகுதிவரை. போஸ்ட் ஆபிஸ் தெரு, க டைவீதி என்.எஸ்.பி ரோடு, பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகள்.அரும்பாவூர் பேரூராட்சி யில் தழுதாழை சாலை முதல் அரும்பாவூர் பேரூ ராட்சி அலுவலகம் வரை.பாலக்கரை முதல் அ.மேட் டூர் வரை. லப்பைக்குடிக் காடு பேரூராட்சியில்,மாட்டு பாலம் முதல் அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளி வரை ஆகிய இடங்களில் கீழ்கண்ட செயல்பாடுகளு க்கு சில கட்டுபாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகி றது.மருந்தகங்கள், பால், காய் கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான செயல்பாடுகள் மட்டும் உரிய காற்றோட்ட வசதியுடன் நி லையான வழிகாட்டு நடை முறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்க ளுடன் செயல்பட அனுமதி க்கப்படுகிறது. இதனைத் தவிர்த்து பிற விற்பனை மையங்கள் அனைத்தும் காலை 10மணிமுதல் பிற் பகல் 1மணிவரை மட்டுமே உரிய காற்றோட்ட வசதியு டன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற் றி 50சதவீத வாடிக்கையா ளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழி காட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கடை களின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படு த்தும் வகையில் கை சுத்தி கரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோத னைக் கருவி கொண்டு பரி சோதனை செய்யவேண்டு ம். கடைகளில் பணிபுரிபவ ர்களும், வாடிக்கையாளர்க ளும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைக ளில்,சமூகஇடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படி யான நபர்களை அனுமதிக் கக்கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்தி ருக்கும் போது, ஒரு நபருக் கும் மற்றொருவருக்கும் இ டையே போதுமான இடை வெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வே ண்டும்.

கொரோனா வைர ஸ் நோய்த் தொற்று பரவ லைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளா னவர்கள் உள்ள பகுதிகளி ல், நோய் கட்டுப்பாட்டு மண் டல எல்லைகளை நுண்ண ளவு வரை வரையறை செ ய்து, நிலையான வழிகா ட்டு நடைமுறைகளின் படி தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சம்மந்த ப்பட்ட வருவாய் வட்டாட்சிய ர்கள், பெரம்பலூர் நகராட்சி ஆணையர், பேரூராட்சி செ யல் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.கொரோனா 3ஆம் அலை நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைக ளை அடிக்கடி சோப்பு கிரு மிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட் டாயம் பின்பற்றவும், நோய் த்தொற்று அறிகுறிகள் தெ ன்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத் துவமனைகளை நாடி மருத் துவஆலோசனை, சிகிச்சை பெறதெரிவிக்கப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்ப ட்டு, விதிமீறல்களில் ஈடுப டுவர்கள் மீது அபராதம் வி திக்கப்படும் நடவடிக்கைக ள் தொடரும். எனவே, கொ ரோனா வைரஸ்தொற்றுப் பரவாமல் தீவிரநோய் கண் காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் வகையில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மே ற்கண்ட கட்டுப்பாடுகளுடன் குற்றவியல் நடைமுறைச்ச ட்டம் 1973 பிரிவு 144 -ன்கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து ஆணையிடப்படுகிறது. இந்த உத்தரவு நாளை (4ம் தேதி) காலை 6மணி முதல் வருகிற 10ம் தேதி மாலை 6 மணிவ ரை வரை அமலில் இருக் கும் என தெரிவித்துள்ளார்.


Tags : Perramulur ,Municipality , Perambalur Municipality, 2 municipalities to implement curfew with new rules from tomorrow to 10th: Collector's order
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...