×

மனிதர்களை தாக்கும் வகையில் மரபணு மாற்றி கொரோனா வைரஸை சீனா உருவாக்கியது: அமெரிக்க அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: ‘சீனாவில் வுகான் ஆய்வகத்திலிருந்தே கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இது மனிதர்களை தாக்கும் வகையில் மரபணு மாற்றி உருவாக்கப்பட்டுள்ளது’ என்று அமெரிக்காவின் குடியரசுக்கட்சி எம்பிக்கள் அறிக்கை கூறியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் இன்றுவரை எல்லோரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் தோற்றம் பற்றி மாறுபாடான தகவல்கள் நிலவி வருகின்றன. இதுகுறித்து சீனாவில் நேரடியாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனமும் தெளிவான பதிலை தரவில்லை. அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற பிறகு, ஜோ பைடன் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் குடியரசுக்கட்சி எம்பிக்கள் குழு நேற்று பரபரப்பான அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘‘சீனாவிலுள்ள விலங்குகளின் சந்தையினால் கொரோனா பரவியது என்ற தகவலை முற்றிலும் மறுப்பதற்கான நேரம் இது. விலங்குகளினால் கொரோனா நிச்சயம் பரவவில்லை. வூஹான் வைரஸ் ஆராய்ச்சி நிலையத்திலிருந்தே கொரோனா வைரஸ் வெளியாகியுள்ளது. இதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மனிதர்களை பாதிக்கும் வகையில் கொரோனா வைரஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது 2019ம் ஆண்டின் செப்டம்பர் 12ம் தேதிக்கு முன்பு பரப்பப்பட்டிருக்கலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.  இதுவும் பல்வேறு உளவுத்தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை என கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்க உளவுத்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

அடுத்து என்ன?
குடியரசுக்கட்சியின் அறிக்கையை அமெரிக்காவின் உளவுத்துறை உறுதிப்படுத்தும் பட்சத்திலேயே இதன் அடுத்தகட்டம் என்னவென்பது தெரிய வரும். மரபணு மாற்றியமைக்கப்பட்ட, மனிதர்களால் உருவான வைரஸாக கொரோனா இருக்கும்பட்சத்தில் இதுகுறித்து சர்வதேச விசாரணையை சீனா எதிர்கொள்ள நேரிடும். பொருளாதாரத்தடை உள்ளிட்ட பல சங்கடங்களையும் சீனா சந்திக்கும்.

Tags : China ,US , Corona, China, US Report, Information
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்