×

மொகரம் ஊர்வலத்துக்கு உத்தரபிரதேசத்தில் தடை

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், வரும் 10 முதல் 19ம் தேதி வரையிலான, 10 நாட்களுக்கு ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முஸ்லிம்களின் மொகரம் பண்டிகை 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், மொகரம் `பண்டிகை’ ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்படுவதாக டிஜிபி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று பரவல் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஊர்லவம் செல்வதை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் கண்காணிக்கப்பட உள்ளன. டிஜிபி.யின் இந்த கடிதத்துக்கு இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags : Moharam procession , Mogaram procession, U.P. , Prohibition
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...