×

ஜிகா வைரஸ் விவகாரம்: மத்திய நிபுணர் குழு மகாராஷ்டிரா வந்தது

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறியும் மத்திய நிபுணர் குழு நேற்று மும்பை வந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவை சேர்ந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ நோய் அறிகுறி எதுவும் இல்லாத நிலையில், ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புனேவில் உள்ள பிராந்திய பொது சுகாதார இயக்குனர், புதுடெல்லி ஹார்டிங்கே பெருமாட்டியார் மருத்துவக் கல்லூரியின் மகளிர் மருத்துவ பிரிவை சேர்ந்த பெண் மருத்துவர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் மருத்துவர் கொண்ட மத்திய நிபுணர் குழு நேற்று மகாராஷ்டிரா வந்தடைந்தது. இந்த குழுவானது ஜிகா வைரஸ் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றிய சுகாதாரத் துறையின் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதுடன் மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து ஜிகா வைரஸ் பரவுவதை தடுக்க பணியாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Maharashtra , Zika virus, Maharashtra
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...