×

அசாம்-மிசோரம் சமரசம்: இரு தரப்பிலும் வழக்குகள் வாபஸ்

அய்சால்:  அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. சமீபத்தில் மீண்டும் எல்லை மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 26ம் தேதி இரு மாநில போலீசாருக்கு இடையே துப்பாக்கி சூடு நடத்தது. இதில், அசாமை சேர்ந்த 6 போலீசார் உட்பட 7 பேர் பலியானார்கள். இரு மாநில எல்லையில் பதற்றத்தை தணிக்க ஒன்றிய பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு, இருமாநில முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, மிசோரம் ஆளுநர் ஹரிபாபு நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஹரிபாபு, ‘‘இரு மாநில எல்லை விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு ஒன்றிய அரசு முயற்சித்து வருகின்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கிறார். இரு மாநில முதல்வர்களும் அமைதி திரும்பவுதற்கு ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளனர்” என்றார். இதனால், பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.  இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டுள்ளதால், அசாம் முதல்வர் மற்றும் அதிகாரிகள் மீது மிசோரம் போலீசார் தொடர்ந்து வழக்குகளும், மிசோரம் எம்பி உள்ளிட்டோர் மீது அசாம் போலீசார் தொடர்ந்த வழக்குகளும் நேற்று வாபஸ் பெறப்ப் பட்டன.

பாஜ எம்பிக்கள் மனு
வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த பாஜ எம்பிக்கள் 16 பேர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து எல்லை பிரச்னை கோரிக்கை மனுவை வழங்கினார்கள். காங்கிரஸ் கட்சி பதற்றமான இந்த சூழலை அரசியல் நோக்கத்துடன் தவறான பயன்படுத்திக்கொள்வதாக குற்றம்சாட்டினார்கள். இந்த கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூஜூ, ‘‘வெளிநாட்டு சக்திகள், தவறான தகவல் அறிக்கையை வெளியிட்டு தொடர்ந்து பதற்றத்தை உருவாக்குகின்றன. வடகிழக்கு மாநிலங்கள் தனக்கு மிகவும் நெருக்கமானது என பிரதமர் மோடி எம்பிக்களிடம் தெரிவித்தார். அரசியல் நோக்கத்தோடு மாநிலங்களை பார்க்கவில்லை என்றும் பிரதமர் கூறினார்” என்றார்.

Tags : Assam ,Mizoram , Assam, Mizoram, cases, withdrawal
× RELATED அசாமில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தலைவன் கைது: கூட்டாளியும் சிக்கினான்