அகாலி தள முன்னாள் தலைவர்கள் பாஜவில் ஐக்கியம்

புதுடெல்லி: பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இப்போதே பல தலைவர்கள் பாஜவில் இணையத்தொடங்கி இருக்கின்றனர். பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் பல்வந்த் சிங் ரமூவாலியாவின் மகளும் அகாலி தளத்தின் மகளிர் பிரிவு முன்னாள் உறுப்பினர் அமன்ஜோத் கவுர் ரமூவாலியா, குர்பிரீத் சிங் ஷா பூர், சந்த் சிங் சதா மற்றும் பல்ஜிந்தர் சிங் டகோஹா உள்ளிட்டோர் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷேக்வாத் முன்னிலையில் நேற்று பாஜவில் இணைந்தனர்.

மேலும் சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த பிரிதம் சிங், முன்னாள் டிவி தொகுப்பாளர் சேதன் மோகன் ஜோஷி உள்ளிட்டோரும் பாஜவில் தங்களை இணைத்து கொண்டனர். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத், ‘‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேசிய நலனில் அக்கறை கொண்டு இயங்கி வருகின்றது. தற்போது கட்சியில் இணைந்துள்ள தலைவர்கள் மிகவும் பிரபலமானவர்கள், நீண்ட அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள்,” என்றார்.

Related Stories: